தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பேரூராட்சி துரைராஜபுரத்தில் வடிகால் மற்றும் சிறுபாலம் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பால்துறை, பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கர், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராசுக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Categories