இத்தாலிய போலீசார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியுள்ளனர். சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கிலுள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் “வாழ்க்கை” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம், மாநில காவல் துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி. இரண்டு பேருக்கு சிறுநீரகம் பரிசாக வழங்கப்பட்டது.
அதனால் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய லம்போர்கினி ஹரகன் வகை கார் சுமார் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 0-100 கிலோமீட்டர் வேகத்தை இந்த கார் 3.2 வினாடிகளில் அடையும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு இத்தாலியில் உள்ள போலோவில் சாதாரண போலீஸ் நடவடிக்கைகளிலும் ரத்தம் மற்றும் உறுப்புகளை அவசரமாக கொண்டு செல்வதற்கும் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.