Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!… வாட்ஸ்அப் “அவதார்” அம்சம் அறிமுகம்?… வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் பெரும்பாலான பயனாளர்களை கொண்டு உள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்குகேற்ப அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது “அவதார்” அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அவதார் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் போன்ற டிஜிட்டல் அம்சமாகும்.

அதனை நீங்களே உருவாக்கலாம். இந்த அவதார் அம்சம் மெட்டாவின் மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பே உள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ல் அறிமுகமாக இருக்கிறது. இந்த அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்-ல் அவதாரை எப்படி உருவாக்குவது என இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

# WhatsAppல் உங்களது அவதாரத்தை உருவாக்க WhatsAppன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்க வேண்டும்.

# வாட்ஸ்அப்பை திறந்து மேல் வலது மூலையிலுள்ள 3 புள்ளிகள் கொண்ட மெனுவைக் கிளிக் செய்யவேண்டும்.

# Settings-க்கு சென்று பிறகு “அவதார்” என்பதைக் கிளிக் செய்யவும்.

# அடுத்ததாக “உங்களது அவதாரத்தை உருவாக்கு” என்பதனைக் கிளிக் செய்யவும்

# பின் “தொடங்கு” என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.

Categories

Tech |