இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்,whatsapp என அனைத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது.
இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் வரை நீடிக்கும். அதன் பிறகு இது மறைந்து விடும். Whatsapp நிறுவனம் தற்போது இதில் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது whatsapp பயனர்கள் இனி அவர்களின் ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ் வைத்துக் கொள்ள முடியும்.இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று அவர்களின் குரல் குறிப்புகளை பதிவு செய்ய மையத்தில் உள்ள மைக் ஐகானை கிளிக் செய்தால் மட்டுமே போதும்.பயனர்கள் தங்கள் குரலை சேமிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் பின்னணி நிறத்தையும் மாற்றிக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இது மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.