உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குழுக்களுக்கு இடையே தகவல் தொழில் பரிமாற்றத்தை எளிதாக கம்யூனிட்டி என்ற அம்சமும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தற்போது 21 புதிய எமோஜிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய செயலிகளில் இருந்து வந்த எமோஜி reaction அம்சம் கடந்த வருடம் whatsapp-லும் கொண்டு வரப்பட்டது. தற்போது கூடுதலாக 21 புதிய எமோஜிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.