Meta நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மெசேஜ் அனுப்புவதற்கு whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது வாட்ஸ் அப்பில் avatar என்ற வசதியை புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து meta நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது வாட்ஸ் அப்பில் அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, துணிகள், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதில் மொத்தம் 36 ஸ்டிக்கர்கள் உள்ளது. அதில் இருந்து நாம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் நாம் உருவாக்கியதை நமது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பகிரவும் முடியும். இந்த வசதிகளை Android மற்றும் iOS என 2 போன்களில் மட்டுமே பெற முடியும். இதற்காக நீங்கள் சமீபத்தில் வெளியான whatsapp அப்டேட் வைத்திருக்க வேண்டும். மேலும் அதை உறுதி செய்வதற்காக play story உள்ளே சென்று அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் whatsapp செயலியில் மேலே வலது புறத்தில் 3 டாட் இருக்கும். அதை கிளிக் செய்தால் உள்ளே செட்டிங்ஸ் ஆப்ஷன் இருக்கும். அதன் உள்ளே Avatar ஆப்ஷன் இருக்கும். பின்னர் get started ஆப்ஷனை கிளிக் செய்து create your OWn avatar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு தனிப்பட்ட நிறம், முடி, முக அமைப்பு போன்றவற்றை செய்யலாம். அவற்றை முடித்தவுடன் டன் ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்” என அதில் கூறப்பட்டுள்ளது.