உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் வெளியாக உள்ளது.
அதன்படி டெக்ஸ்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. ஸ்டேட்டஸ் வழக்கம் போல் end to end encryption முறையில் தான் செயல்படும் என்ற போதிலும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை விதிகளையும் மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளவர்களையும் கண்காணிக்க இந்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சோதனை முறை முடிந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.