திருச்சி மாவட்டத்தில் வாழை மட்டையில் இருந்து சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழில் கூடத்தை முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் மற்றும் சலோம் பவுண்டேஷன் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் மாரிமுத்து, இயக்குனர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் புதிய முயற்சியாக இயற்கையான முறையில் வாழை மட்டையில் இருந்து நார் மற்றும் நாப்கின் தயாரிப்பது குறித்து அவர்கள் விளக்கமளித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாப்கின் பாதுகாப்பானது என்றும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாதது என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.