நம் நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் சென்ற 2018ம் வருடம் பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர்.
இதையடுத்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் 2 ஹக்டேர்க்குள் நிலம்வைத்திருக்கும் விவசாயிகள் இணையலாம். இதில் பயன்பெற 18 -40 வயதுக்குள் இருக்கவேண்டும்.
திட்டத்தில் இணைந்த பின் விவசாயிகள் 60-வயது வரை மாதம் ரூ.55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்து வந்தால் 60 வயதிற்கு பின் மாத ஓய்வூதியமாக ரூபாய். 3000 கிடைக்கும். ஒருவேளை விவசாயி இறந்தால் விவசாயியின் மனைவிக்கு 50 சதவீத ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. அத்துடன் இந்த குடும்ப ஓய்வூதியம் விவசாயிகளுக்கு துணைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.