வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. ரோபோவின் இருகரங்கள் ஆகிய பாகங்களின் உதவியோடு வாழைப்பழத்தை மனிதர்கள் உரிப்பது போல ரோபோவுக்கு வாழைப்பழத்தை உரிப்பதற்கு 13 மணி நேரம் பயிற்சி வழங்கியதாக டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்றும் சோதனை கட்டத்தில் இந்த ரோபோ இருக்கிறது என்றும் செயல்பாட்டுக்கு வரும்போது உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.