Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே சூப்பர்! 10 ஆண்டுகளாக இல்லாத ஒன்றை…. மாற்றி காட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக மீது இருந்த குற்றச்சாட்டுகள் இந்த முறையும் வந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருக்கிறார். மேலும் சட்டப்பேரவையில் தன்னைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டாம் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப்பையில் ஜெயலலிதா, இபிஎஸ் படங்களே இருக்கட்டும் தன்னுடைய படம் வேண்டாம் என்று கூறியது மேலும் அவர் மீது மக்களுக்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இல்லாத நடைமுறை ஒன்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் மாற்றிக் காட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெறாமல் இருந்தன. ஆனால் இதை தற்போது முதல்வர் மாற்றிக் காட்டி கேள்வி நேரத்தில் தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பத்து வருடங்களுக்கு பிறகு முதலமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தில் பதிலளிப்பது என்பது இது தான் முதன்முறை என்பதால்  ஸ்டாலினுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |