உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்ற மனைவியும் பவன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே குங்ஃபூ, கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். இவர் குங்ஃபூ மற்றும் கிக் பாக்ஸிங் போன்றவற்றில் ஏற்கனவே மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தில் பவன் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதாவது 2 கைகளால் 13 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து சாதனை படைத்த சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். மேலும் சிறுவனின் சாதனை நிகழ்வில் பயிற்சியாளர் ஆனந்த் குமார், சிறுவனின் பெற்றோர் மற்றும் சக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கைகளை தட்டி ஊக்கப்படுத்தினர். அதோடு உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.