Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. 100 ரூபாய் இருந்தால் போதும்….. எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்….!!!

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 100 ரூபாய் கட்டணத்தில் தினசரி பாஸ் முறை நடைமுறைக்கு வந்தது.

அதன் மூலமாக பயணிக்கும் நபர் 100 ரூபாய் செலுத்தி பாஸ் மற்றும் 50 ரூபாய் செலுத்தி பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலமாக தினசரி காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.ஒரு நாள் முழுவதும் பயணத்தை முடிக்கும் போது ரயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திரும்பிக் கொடுத்துவிட்டு உங்களின் ஐம்பது ரூபாயை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் இந்த பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது .இவ்வாறு மெட்ரோ ரயிலில் நடைமுறையில் உள்ள இந்த பாஸ் திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |