Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. 143 பேருக்கு பணி நியமன ஆணை….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 75 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் ரூ.14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சிகள் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 29 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த48 வாரிசுக்தாரர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 66 வாரிசுக்தாரர்களுக்கும் என மொத்தம் 143 வாத்தாளர்களுக்கு இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், தூய்மை பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Categories

Tech |