அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர் Mikaila ulmer. இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்கள் வரை உள்ளது. இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் மீ அண்ட் தி பீஸ் லெமனேட் எனும் நிறுவனத்தின் தலைவராக இவர் இருக்கிறார். 17 வயதில் தொழிலதிபராக காரணமே தேனீக்கள் தான் தேன் அடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் சுவையான புதினா, ஆளி விதை, எலுமிச்சை போன்றவற்றை கலந்து பி ஸ்வீட் லெமனேட் என்னும் பெயர் கொண்ட இயற்கை பானத்தை தயாரித்து மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருகின்றார்.
அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ஹோல் புட்ஸ் எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் Mikaila நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகின்றது. அதற்காக நிலைகளுடன் 70 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருக்கிறது. மேலும் தொலைக்காட்சி ஷார்க் டாங்க் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலமாக இந்த சிறுமிக்கு ரூபாய் 38.59 லட்சம் முதலீடு கிடைத்திருக்கிறது. இந்த வகை பானங்களை கடந்த 1940ல் Mikaila வின் பாட்டி முதலில் தயாரித்துள்ளார். அதற்கான ரகசியம் வாழையடி வாழையாக தற்போது Mikaila வரை வந்து சேர்ந்திருக்கின்றது. Mikailaவிற்கு இந்த வியாபாரத்திற்கான யோசனை நான்கு வயதாக இருக்கும் போதே வந்துள்ளது. மேலும் அவரது நான்கு வயதில் அவரை தேனீ கடித்துள்ளது. அப்போது வலியால் துடித்த Mikaila அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் தேனீக்களை பற்றி படிக்க தொடங்கியுள்ளார்.
அதன் பின் பி ஸ்வீட் லெமனேட் பானம் தயாரிக்கும் தொழிலை கடந்த 2009 ஆம் வருடம் தொடங்கியுள்ளார். தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தேனீக்களை காப்பாற்றுவதற்காக செலவிட்டு வரும் Mikaila தேனீக்களை காப்பதே தனது மிகப்பெரிய குறிக்கோள் என தெரிவித்துள்ளார். தனது முயற்சியை தொடங்கியதிலிருந்து தேனீக்கள் காப்பாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு லாபத்தில் பத்து சதவீதம் நன்கொடையாக அளித்து இருக்கின்றார்.