Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி… பிரபல நாட்டில் வரலாறு படைத்த வாலிபர்….!!!!!!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெயிலன் ஸ்மித் (18) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்மித்தை  எதிர்த்து போட்டியிட்ட நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளமையான வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஸ்மித் பெறுகிறார்.

இது குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது, இயர்லி நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது. மேலும் எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். ஸ்மித் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசர காலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விஷயங்களை முன் வைத்து பேசியுள்ளார்.

Categories

Tech |