Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…”2 மணி நேரத்தில் பெண்ணாக மாறிய ஆண்”… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆன அப்துல் கலாம் உலக சாதனைக்காக ஒப்பனை மாராத்தான் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினமான நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. 90 ஒப்பனை கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனை கலைஞர்களுடன் spectacular ramp walk மூலம் அசத்தியுள்ளனர்.

ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது விதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீதமான ஒப்பனை கலைகளில் தலைசிறந்த ஒப்பனையாக ஆண் மாடலை பெண்ணாக தத்ரூபமாக  மாற்றக்கூடிய ஒப்பனை கவிஞர்கள் அகத்தியா சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வாகி அப்துல் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த ஒப்பனை  நிகழ்ச்சியில் பிரபல ஒப்பனை கலைஞர் செல் டன், திரை உலக பிரபலம் பிரியதர்ஷினி எழுத்தாளர் லதா சரவணன் , வேல்ஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி பிரீத்தா கணேஷ் போன்றோர்  நடுவர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் 2 மணி நேரத்தில் ஆனை மேக்கப் மூலமாக பெண்ணாக மாற்றி அகத்தியருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அது மட்டுமல்லாமல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மேடையில் தோன்றியபோதும் அச்சு  அசலாக  பெண் போல் இருந்ததாகவும் இதன் மூலமாக மேக்கப் துறையில் அகத்தியாவின் ஈடுபாடும், திறமையும் எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது எனவும் ரசித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |