Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்”10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது  படிப்பை கைவிட்டார். இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இந்த தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் சப்ரினா காலிக் 500-க்கு 467 மதிப்பெண்களை பெற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலிடத்தை பெற்றார். மேலும் கணிதம், உருது, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஏ1 கிரேடு  பெற்றுள்ளார்.

இது குறித்து சப்ரினா காலிக் கூறியதாவது. எனது படிப்பை திருமணத்தின் காரணமாக நான் கைவிட்டு விட்டேன். இதனையடுத்து மீண்டும் கடந்த ஆண்டு நான் எனது படிப்பை தொடர தீர்மானித்தேன். மேலும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொண்டும் படிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் கடினமானதாக தான் இருந்தது. ஆனால் எனது சகோதரிகள்,  கணவர் என அனைவரும் ஆதரவாக இருந்தனர். மேலும் சில நாட்களில் இரவு முழுவதும் படித்துள்ளேன். இதனையடுத்து தேர்வுக்கு தயாராக தினமும் 2 மணி நேரம் படித்தேன். நான் கடினமாக உழைத்ததற்கு பயனாக இந்த மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துள்ளது. மேலும் நான் உயர்கல்வி படிக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |