Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 40 வருடத்திற்கு பின் அனுமதிக்கப்படும் பெண்கள்…. எதற்கு தெரியுமா…?

ஈரானில் 40 வருடத்திற்கு பின் உள்ளூர் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின் பெண்கள் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விதிமுறைகளில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தது. மேலும் பெண்கள் தனியாக கார் பார்க்கிங் செய்யும் வலிகளில் கால்பந்து போட்டிகளை பார்ப்பதாக இருந்து. இந்த நிலையில்இந்த வியாழக்கிழமை தான் முதன் முறையாக 40 வருடத்தில் பெண்கள் கால்பந்து ரசிகர்கள் உள்ளூர் போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

500 கால்பந்து ரசிகைகள் தனியான நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில் டெஹ்ரானில் ஒரு பெண் ரசிகை கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி கேட்டு தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். பிரபல ஈரான் திரைப்பட இயக்குனர் ஜாபர் பானாய் 2006 இல் இயக்கிய ஆப்சைட் என்னும் திரைப்படம் பெண் ரசியை கால்பந்து தகுதி போட்டியினை பார்க்கப் போவது போல படம் எடுத்திருப்பார். மேலும் இவர் வீட்டு சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கதாகும் அவரது படம் தற்போது நிஜமாகி இருக்கிறது.

Categories

Tech |