உலகம் முழுவதும் whatsapp செயலுக்கு அடுத்ததாக இன்ஸ்டாகிராம் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிக்கு புகழ் பெற்ற இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயணங்கள் முன்னதாக தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்த நிலையில் கலந்து சில நாட்களுக்கு முன்பாக இதனை 60 வினாடிகள் வரை பதிவேற்றிக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உங்களின் போஸ்ட் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவைகளை நீங்கள் 75 நாட்களுக்கு முன்பாக schedule செய்து பதிவேற்றம் செய்வதற்கான அம்சத்தை instagram தற்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறிப்பிட்ட கால அளவை கொடுத்து பதிவேற்றம் செய்யும் போஸ்ட் மற்றும் ரீல்ஸ் நீங்கள் குறிப்பிட்டபடி அந்த நாளில் உங்கள் அக்கவுண்டில் அப்லோடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.