Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… “94 வருட வரலாற்றில் முதன் முறையாக”… இறுதி சுற்றுக்கு முன்னேறிய அழகி… அதுவும் இந்த மாதிரியா…!!!!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மிஸ் இங்கிலாந்து 2022 அழகி போட்டியில் லண்டன் நகரை சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருக்கின்றார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர் ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதி சுற்று வரை முன்னேறி இருக்கின்றார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94-வது வருட வரலாற்றில் அழகி ஒருவர் முதன்முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதி சுற்றிற்கு முன்னேறி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மேலும் தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும் சமூக வலைத்தளங்களில் அழகு பற்றி சொல்லப்படும் நிர்ணயங்கள் மாற்றும் ஒப்பனை இல்லாமல் போட்டியில் பங்கேற்றதாக மெலிசா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சமூக அழுத்தத்தின் காரணமாக ஒப்பனை செய்து கொள்வதாகவும் நமது இயற்கையான தோள் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார். தங்கள் மீதான நம்பிக்கையை வளர செய்ததற்காக பல இளம் பெண்கள் தனக்கு நன்றி தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். மெலிசா அழகு பற்றி அனைத்து படிநிலைகளையும் தான் உடைக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் மெலிசா வெற்றி பெற வேண்டும் என அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |