தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலை வாசியால் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே சுங்க கட்டணத்தின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் எரிவாயு மற்றும் எரி பொருட்களின் விலை அதிகரிப்பது விற்பனைச் சந்தையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்யும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். இந்நிலையில் எரிவாயுவின் விலை 965 ரூபாயாகவும், எரிபொருளின் விலை 102 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு விலை அதிகரிப்பதால் ஏழை எளிய மக்கள் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் எரிவாயு வழங்கும் குடும்பத்திற்கு நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மண்ணெண்ணெயும் வாங்க முடியாமல், எரிவாயு சிலிண்டரும் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது பா.ஜ.க அரசின் கொடுங்கோல் ஆட்சி என சீமான் தெரிவித்துள்ளார். எனவே எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.