Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! PM கிஷான் நிதி உதவித் திட்டம்: மோசடியை தவிர்க்க அரசு அதிரடி..!!!!!

விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தை அமல்படுத்தியது. 2000 ரூபாய் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயி தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசுப் பதவிகளை வகிக்கும் ஒரு குடும்பம், டாக்டர், வழக்கறிஞர், போன்ற மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. ஆனால் இதில்  தகுதியற்ற 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் நிதியுதவியை பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இத்திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது பற்றி அரசு வட்டாரங்கள் கூறியது போது, நாட்டிலே ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல திட்டங்களில் தகுதியற்றவர்கள் பயன்படுகின்றன. விவசாயிகள் நிதியுதவி திட்டத்திலும் இது நடந்துள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் வருமானவரி நிதியுதவி பெறும் விவசாயிகள் நேரடியாக அடையாளம் காட்ட வேண்டும் என மாநில அரசுகளிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை பெற்று அதில் விவசாய நிதி உதவி பெற்று பெயர் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என  மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்து.

Categories

Tech |