Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்”…. இன்ப அதிர்ச்சியில் பரபல நடிகை…. யார் அவங்க…? நீங்களே பாருங்க….!!!

நடிகை பிரியங்கா மோகனுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த திரைப்படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யா பிரியங்கா மோகனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யா தனக்கு அனுப்பிய பரிசு பற்றியும் அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய படம் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றாள் அவர்களுக்கு கிஃப்ட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |