நடைபெற்ற நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் 1968-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்நிலையில் நேற்று இவருடன் படித்த நண்பர்களின் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தனது பழைய நண்பர்களை சந்தித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. நான் 6-ஆம் வகுப்பு படித்த போது பாடப்புத்தகத்தில் உள்ள ராபர்ட் பிராஸ்ட் என்பவர் எழுதிய ஆங்கிலச் செய்யுளை பள்ளி வளாகத்தில் பாடலாக பாடினேன்.
அப்போது நான் பாடிய பாடலுக்கு எனது நண்பன் பிரபு ராம் இசையமைத்தார். அது அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ? எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. எனக்கு கூறினார். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த ஆங்கில பாட புத்தகத்தில் உள்ள ”ஹூஸ் வுட்ஸ் தீஸ் ஆர் ஐ திங் ஐ நோ” என்ற பாடலை ஒரு நிமிடம் முழுமையாக பாடியுள்ளார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அனைவரும் கைத்தட்டியும், விசில் அடித்தும் அவரை பாராட்டியுள்ளனர்.