தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் சீதாராமம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.