ஏழை மக்களுக்காக பத்து ரூபாய்க்கு மதியத்தில் உணவு தரும் முறை புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் 10 ரூபாய்க்கு மதிய உணவு தரும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வந்தன. குறிப்பாக ஏழை மக்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் இதன் மூலம் பயன் பெற்றனர்.
பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது வந்தது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் குறைந்த விலையில் சுத்தமான, மத்திய உணவு தரும் பணியை துவக்கி வைத்த அவர் உணவு சமைக்கும் இடத்தில் ஆய்வு செய்த உணவின் தரத்தை அறிய தானே உணவு வாங்கிச் சென்றார்