நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக வேலையில்லாமல் பல்வேறு தரப்பினரும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு சிலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னட திரைப்பட துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த திரைப்பட தொழிலாளர்கள் 3000 பேருக்கு தலா ரூபாய் 5,000 நிதி வழங்குவதாக நடிகர் யாஷ் அறிவித்துள்ளார்.