ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. கடைசியாக இவர் இயக்கத்தில் சாமி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. தற்போது இதே படத்தை அருண் விஜய்யை வைத்து யானை என்ற டைட்டிலில் ஹரி இயக்கி வருகிறார்.
From the sets of #Yaanai!!❤📽#DirectorHARI #Karaikudi #LastLegOfShoot@DrumsticksProd @gvprakash @priya_Bshankar @realradikaa @thondankani @iYogiBabu @editoranthony pic.twitter.com/26fuqrMKzm
— ArunVijay (@arunvijayno1) November 1, 2021
மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, கே.ஜி.எஃப் பிரபலம் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ், சமுத்திரகனி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது யானை படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிலிருந்து போஸ் வெங்கட், சஞ்சீவ் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.