தனுஷின் 44-வது படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
#D44 is #Thiruchitrambalam@dhanushkraja @anirudhofficial #MithranJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar pic.twitter.com/wYVpyBx9Tu
— Sun Pictures (@sunpictures) August 5, 2021
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.