Categories
உலக செய்திகள்

அடடே செவிலியர்களுக்கு அமெரிக்காவில் வேலை….!!! நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையில் செவிலியர்களுக்குகடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளிலிருந்து  செவிலியர்களை வரவழைத்து பணியமர்த்துகின்றனர்.

கொரோனா நோய் தொற்றால் உலகின் எல்லா  நாடுகளை விடவும் அமெரிக்கா கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அங்கு சுகாதார கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் பல செவிலியர்கள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றும், பலர் விடுமுறையிலும் சென்றுவிட்டனர். அதனால் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கலிபோர்னியாவில் தேவையைவிட 40 ஆயிரம் செவிலியர்கள் குறைவாகவே உள்ளனர்.

இதனால் நோயாளிகளின் பராமரிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக பிற நாடுகளிலிருந்து செவிலியர்களை வரவழைத்து பணியமர்த்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக குடியேற்ற பிரச்சினைகளுக்கான வக்கீல் ஏர்ல் பேச்சர் ஆண்டர்சன் கூறுகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் நர்சிங் படிக்கும் செவிலியர்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பட்டம் பெற்று வெளியே வருவதில்லை என்பதால் இது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது.

இதனால்  வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் ஆண்டு ஒன்றுக்கு நிரந்தர குடியேற்றத்திற்கான கிரீன் கார்டுகள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே தரப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பணியாளர்களின் பெர்மிட்டுகள்  விரைவில் புதுப்பிக்கப்படுகின்றன.

Categories

Tech |