செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சிவரன்ஸ் விண்கலம் ஒலிவாங்கி மூலம் எடுத்த காற்றோட்டத்தின் ஒளிப்பதிவை முதல் முறையாக நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்வதற்காக நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுள்ளது. இந்த பெர்சிவரன்ஸ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் கடந்த 18ஆம் தேதி தரையிறங்கியுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருந்த 19 கேமராக்களில் அங்குள்ள நிலவரம் பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து பெர்சிவரன்ஸ் விண்கலம் எடுத்த பல்வேறு விதமான புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பியது. இந்த புகைப்படத்தில் செவ்வாய் கோளின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக பெர்சிவரன்ஸ் விண்கலம் தனது இரண்டு ஒலிவாங்கி மூலம் செவ்வாய் கிரகத்தில் காற்று ஓட்டத்தின் காரணமாக ஏற்படும் ஒலியை பதிவு செய்துள்ளது. இத்தனையும் தற்போது நாசா வெளியிட்டுள்ளது.பெர்சிவரன்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் 2030ஆம் ஆண்டு மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் நாசா திட்டமிட்டுள்ளது.