சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர் பாலு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் இனி ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க போகிறது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றாக மாதம்தோறும் நான் ஆய்வு செய்வேன். திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்தும் அளவிற்கு திட்டங்கள் செயல்படுத்தபடும். தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நிரந்தரமாக இருக்க வேண்டும், அதற்காக நாம் கடுமையாக பணியாற்றவேண்டும். நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார்.