திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் என்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் என்னும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் 7 உறுதிமொழி திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
- அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமான வளர்ச்சி.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு கோடி மக்கள் மீட்கப்படுவார்கள் என்று பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
- 10 ஆண்டுகளில் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
- அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும் .
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
- பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
- உணவு தானிய உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த திட்டம்.
- நீர் வளத்தை மேம்படுத்தி மறுசுழற்சி செய்து பயன்படுத்த திட்டம்.
- அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.
- கற்றல் வழி காட்டுதலில் முதல் 10 இடங்களில் வர வழிவகை செய்யப்படும்.
- மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பட்டதாரிகளை இரு மடங்காக உயர்த்த திட்டம்.
- நகர்ப்புற பகுதிகளில் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
- அனைத்து நகர்புற பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும்.
- 2031 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சிறந்த 15 மாநகரங்கள் உருவாக்க வழிவகை செய்யப்படும்.
- மனித கழிவை மனிதனே அகற்றும் நிலை மாற்றப்படும்.
- லட்சிய மிகப் பெரியது ஆனால் நான் உங்கள் தோழன் என்ற அண்ணனின் வரிகளுக்கு ஏற்ப நான் உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி பெற வைப்போம் என்று கூறியுள்ளார்