தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் 124 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக 158 இடங்களை திமுக கைப்பற்றுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்ட தொகுதியிலேயே உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட உதயநிதி, தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.