நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பாவாடை தாவணி அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்த வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தார். இவர் இடையிலேயே தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு வரும்போது ரோஷினி புதுவிதமான உடைகளை அணிந்து வருகின்றார். இது பலரையும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் ரோஷினி தாவணி அணிந்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் இவர் மிகவும் இளமையாக இருக்கின்றார் என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.