Categories
மாநில செய்திகள்

அடடே! திமுக ஆட்சியில் “பெண்களுக்காக பல திட்டங்கள்” – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

முதல்வர் முக ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுக அரசு கடந்த காலங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது.

அதேபோல தற்போது திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நம் நாட்டினுடைய முன்னேற்றம் பெண்களுடைய முன்னேற்றம்தான். முக்கியம் என்று கருதி சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |