Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே… திருமணம் முடிந்த மறுநாளே… கவிஞர் சினேகன் வாழ்க்கையில் திருப்பம்…!!!

திருமணம் முடிந்த மறுநாளே சினேகன் தனது மனைவியுடன் படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான  கமல்ஹாசன் நடத்தி வைத்தார் . இதை தொடர்ந்து சினேகன்- கன்னிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சினேகன் தனது மனைவி கன்னிகாவுடன் விமானத்தில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘திருமணம் முடிந்த மறுநாளே நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்ததும். அதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |