Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே.. நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்…. வியப்பில் பொதுமக்கள்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் பப்பு. நேற்று முன்தினம் இவர் வளர்த்து  வரும் நாய் குட்டிக்கு  5-வது வயது பிறந்தது. இந்நிலையில் முத்துகுமார்  குடும்பத்தினருடன் சேர்ந்து அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக கேக் வாங்கி அதில் ஹேப்பி பர்த்டே பப்பு என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதில் முதல் கேக் துண்டை பப்புவிற்கு ஊட்டியுள்ளார். இந்த சம்பவம்  கிராமத்து மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |