நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டிக்கும் இடையிலான திருமணம் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முந்தையநாள் வரறேப்பு விழா நடிகை வீட்டில் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானது.