நடிகை சமந்தா பதிவிட்ட பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என பிசியாக நடித்து வருகின்றார். சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மேலும் படத்தை அப்டேட்டுகளையும் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது பகிர்ந்த ஒன்று ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக இணையத்தில் கூறியுள்ளார். மேலும் அதில் வயிறு வலிக்கும் வரை நீங்கள் சிரிப்பதைப் பார்க்க காத்திருக்க முடியாது என்றும் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு என்றும் குறிப்பிட்டுள்ள சமந்தா ஏப்ரல் 28ஆம் தேதி படம் ரிலீசாகிறது என பதிவிட்டதோடு ஷூட்டிங்கின் நிறைவின் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.