ஐஸ்வர்யாவின் பயணி பாடலுக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022
இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள “பயணி” என்ற பாடலுக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “பாடல் வீடியோ வெளியிட்டதற்கு எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கடவுளின் ஆசீர்வாதம்” என்றும் பதிவிட்டுள்ளார். ஜனவரி மாதம் தங்கள் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த பின் ஐஸ்வர்யாவை டேக் செய்து முதல் முறையாக தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.