நடிகர் மகேஷ்பாபு வாங்கியுள்ள ஆடி -ஈ-ட்ரான் காரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ்பாபு. இவர் தமிழ், மலையாளம் மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் Audi E-tron எலக்ட்ரிக் எஸ். யூ.வி. கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் ஆடி -ஈ-ட்ரான் எப்படி இருக்கும் என்று பயன்படுத்தவும் ஆடி காரின் அனுபவத்தை பெற ஆர்வமுடன் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த காரின் விலையானது 1.01 கோடியில் இருந்து 1.19 தோழி வரை விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.