புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சத்திய பிரியங்கா அறிவித்துள்ளார். அதன்படி பெண்களுக்குப் பிரத்தியேகமாக நவீன வசதியுடன் கூடிய பிங்க் இலவசப் பேருந்துகள் இயக்கப்படும். 200 பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories