சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ் ஆக வளம் வந்த இவர் அதன் பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் அன்பே வா என்னும் தொடரில் பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையே தான் திடீரென மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகியது. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் போல் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின் மகாலட்சுமி வழக்கம் போல தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை அடுத்து அண்மையில் அழகான புடவையில் சூப்பரான மேக்கப் போட்டு போட்டோஸ் எடுக்க அட நம்ம மகாலட்சுமி இது என ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றார்கள்.
Categories