மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசும்போது பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியதேவனாக நினைத்து பார்த்தது உண்டு அதாவது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியவுடன் அதில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் என கேட்டேன். ஆனால் அதற்கு அவர் உங்கள் ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது என சொல்லி மறுத்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து அப்போதே ஏதாவது கதை இருந்தால் கூறுங்கள் என ரஜினி கேட்டதாகவும் மணிரத்னம் சொன்ன ஒரு கரு ரஜினிகாந்த்க்கு பிடித்துப் போனதாகவும் அந்த படத்தில் நடிகர் ரஜினி நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் மணிரத்தினம் தரப்பில் இதனை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் இவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்தால் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றார்கள். அதிலும் சிபிச் சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி போன்ற பெயர்களும் ரஜினி படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.