இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று பல்வேறு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட் கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டு வேலை வாய்ப்புகளை அளிக்கும் படி உள்ளதாகவும், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.