சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மாநாடு படத்திற்கு பிறகு மீண்டும் வேறொரு படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் வெளியாகிய “மாநாடு” திரைப்படம் மக்களிடையே நல்ல நல்லவரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் இப்படம் வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடினர். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்பொழுது மீண்டும் எஸ்.ஜே.சூர்யா-சிம்பு கூட்டணி இணையப் போவதாக சினிமா துறையில் பேசப்படுகிறது.
சென்ற 2019ஆம் வருடம் மலையாளத்தில் வெளிவந்த “டிரைவிங் லைசென்ஸ்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்தத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக செய்தி கசிகிறது. இப்படத்திற்கு பெரிய தயாரிப்பு நிறுவனம் ரீமேக் உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் மறுபடியும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூரியா இந்தக்கூட்டணியை சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருவதாக சினிமா துறையில் தகவல் வெளியாகியுள்ளது.