செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, நெடுஞ்சாலையை பொருத்தவரை 258 கிலோ மீட்டர் தான் எங்களுடைய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள், மீதி இருக்குற சாலைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக மாநகராட்சியிக்கு சம்பந்தப்பட்டது. அது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சுற்றி சுற்றி அந்தப் பகுதிகளிலேயே பணிகளை வேகமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்கள் சுற்றி கொண்டு இருக்கிறார்.
எனவே மாநகராட்சியின் சாலைகளை விரைந்து செயல்படுவதற்கு அமைச்சர்கள் அங்கங்கு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள், விரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய நெடுஞ்சாலைத் துறையை பொறுத்தவரை சென்னை மாநகராட்சிக்கு ஒட்டு மொத்தமாக 258 கிலோ மீட்டர் தான். அந்த பணிகள் நாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். அதோடு மட்டுமல்ல முதலமைச்சர் பொருத்தவரை ஒரு புதிய ஆணையை நெடுஞ்சாலை துறைக்கு அளித்துள்ளார்.
ரோடு மேல ரோடு போட்டுக்கிட்டே போறதுனால ரோடு மேல போய் இருக்கு, வீடுகள் எல்லாம் பள்ளத்தில் போகிறது. இதனால் மழை காலங்களிலே வீடுகளுக்குள் எளிதாக தண்ணீர் புகுந்து விடுகிறது. அதனால் நெடுஞ்சாலை துறைக்கு என்ன ஆணையிட்டிருக்கிறார் என்றால், நீங்கள் ரோடு போடும் போது மில்லிங் செய்துவிட்டுதான் ரோடு போட வேண்டும், ஏற்கனவே உள்ள ரோட்டில் உள்ள தார் பகுதிகளையும், ஜல்லி பகுதிகளையும் எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆணையை ஏற்று சென்னை மாநகராட்சியிலும் சரி, அதே போன்று தமிழ்நாட்டில் இருக்கிற நகராட்சி பகுதி, அதேபோன்று டவுன் பஞ்சாயத்து பேரூராட்சிகள் இந்த இடங்களிலும் இதை கடைபிடிக்க துறைகளின் சார்பாக நான் ஆணையிட்டு இருக்கிறேன். இது வந்து வெளியில வருகின்ற சாலைகளுக்கு பொருந்துமா என்றால் பொருந்தாது.
வெளியே இருந்து ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு நாங்க சாலை போடுகிறோம் என்றால் ஏற்கனவே இருக்கிற சாலையை மேல போடும்போது அங்கே பலம் இருக்க தான் செய்யும். அங்கே அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நகரப் பகுதிகள் அதேபோன்று பேரூராட்சி பகுதிகளில் மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சரை ஆணையை ஏற்று மில்லிங் செய்து அதன் பிறகுதான் புதிய சாலை போடுகின்ற திட்டம் நெடுஞ்சாலை துறையை பொருத்த அளவிற்கு கடைப்பிடித்து வருகிறோம். அதனை சிறப்பாக செய்து முடிப்போம் என தெரிவித்தார்.