Categories
மாநில செய்திகள்

அடடே…. ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் சேகரித்து…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்….!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார் மற்றும் நாட்டு வைத்தியம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நடத்துகின்ற பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். அப்போது இது பற்றி அந்த குழந்தைகளிடம் கேட்டபோது ,அவர்கள் பெற்றோர்கள்தான் இந்த நாணயம் செல்லாது என கூறி, விளையாட தந்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும், அது புழக்கத்தில் தான் உள்ளது என்பது பற்றி அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வெற்றிவேல் முடிவு செய்தார். இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து, கார் வாங்குவதாக முடிவு செய்து, அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து ரூ.6 லட்சம் அளவிலான 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிவேல், தனது குடும்பத்தினருடன் அவர் சேமித்து வைத்த 10 ரூபாய் நாணயங்களை, ரூ.5 ஆயிரமாக பிரித்து, தனித்தனியாக பார்சலாக கட்டி, சேலம் ஜங்ஷன் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கார் ஷோரூமிற்கு, அந்த பணம் மூட்டைகளை கொண்டு போய் உள்ளார். அதன்பிறகு, அந்தப் பணத்தினை கொடுத்து புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

மேலும் இதுபற்றி வெற்றிவேல் கூறியுள்ளதாவது, இதுவரைக்கும் 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. ஆனால் சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற வடமாவட்டங்களில், இந்த 10 ரூபாய் நாணயங்களை கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் வாங்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து கார் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |